இந்த வார ராசிபலன் (02.11.07 முதல் 08.11.07)

Read Time:12 Minute, 56 Second

1-mesam.jpgமேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: பணவரவு பெருகும். பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கும் நீங்கள் அதன் பலனை அடைவீர்கள். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டானாலும் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு: இல்லறத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். யாரிடமும் தேவையில்லாமல் பேசாதீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் அனைத்து ஊழியர்களிடமும் ஒற்றுமையாக இருங்கள். மேலதிகாரிகளால் சிறு இம்சைகள் இருந்தாலும் பிரச்சனை ஏதும் இருக்காது.

2-resabam.jpgரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)
பொது: சில குழப்பங்களுக்கு ஆளானாலும் உறவினர்கள் தங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவார்கள். பணவரவு அதிகரிக்கும். உங்களின் திறமையைக் கண்டு பலரும் வியப்படைவார்கள்.
பெண்களுக்கு: பணவரவால் குடும்பத்தில் மகிழச்சி இருக்கும். தோழிகளுக்கு உதவி செய்து சந்தோஷப்படுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு மங்கல காரியம் நடக்கும்.
வேலை பார்ப்போருக்கு: வேலைகளில் மாற்றம் கிடைத்து செல்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் தங்களுக்கு உதவி செய்வார்கள். சம்பளம் உயரும்.

3-midunam.jpgமிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொது: தடைகளை உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடுவீர்கள். தாங்கள் செய்யும் செயல்களில் தங்களுடைய முழுத்திறமையை காட்டுவீர்கள். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.
பெண்களுக்கு: பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தேவையில்லாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் பணிகளில் எந்தவித சுமையும் இருக்காது. நீங்கள் எதிர்பார்த்த இடங்களுக்கு மாறுதல் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

4-kadagam.jpgகடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொது: பண வரவு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை வேண்டும். எந்த செயலை செய்தாலும் அதில் உங்களுடைய திறமை வெளிப்படும்.
பெண்களுக்கு: கணவரிடம் சற்று கருத்து வேறுபாடு இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குழந்தைகளால் தங்களுக்கு சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
வேலை பார்ப்போருக்கு: பணியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து விடும். தங்கள் வேலை திறமையால் மேலதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள்.

5-simmam.jpgசிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொது: சிரமங்கள் அனைத்தும் குறைந்து வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். எத்தனை தடைகள் வந்தாலும் வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல செய்திகள் வெகு தூரத்திலிந்து வந்து தங்களுடைய வாழ்வை மேம்படுத்தும்.
பெண்களுக்கு: புதிய ஆடைகள், நகைகள் போன்றவை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த அன்பை பெற்று அனைத்தையும் சாதித்து விடுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தினால் அமைதி நிலவும்.
வேலை பார்ப்போருக்கு: பணியிடத்தில் நெருக்கடிகள் இருந்தாலும், அதை திறம்பட முடித்து உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். திடீர் பணி மாற்றத்தினால் சிரமங்கள் ஏற்படும்.

6-kanni.jpgகன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொது: குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். வரவு இருந்தாலும் அதற்கு முன்னரே செலவுகள் ரெடியாக காத்துக் கொண்டிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
பெண்களுக்கு: கணவர் உங்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார். எதையாவது நினைத்து கவலை அடையாதீர்கள். வீண் செலவுகளை தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்துங்கள்.
வேலை பார்ப்போருக்கு: மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனம் தேவை. பணிகளில் அதிக நெருக்கடி இருந்தால் வேறு வேலையை தேடிக் கொள்வது நல்லது. வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்.

7-thulam.jpgதுலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொது: குடும்பத்தில் பிரச்சனைகள் அகன்று நிம்மதியாக இருப்பீர்கள். புதிய நட்புகள் பிறக்கும். எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நிறைவடைய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவினர்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு: கன்னிப் பெண்களுக்கு மங்கல காரியம் நடக்கும். குடும்பத்தில் உள்ள பெண்கள் அக்கம், பக்கத்தினருடன் கவனத்துடன் பழகுங்கள். தங்கள் திறமையைக் கண்டு கணவர் ஆச்சரியப்படுவார்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்களுடன் சேர்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள். திறமையுடன் உழைத்தால் சம்பள உயர்வு தானாக கிடைக்கும்.

8-viruchagam.jpgவிருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)
பொது: மகிழ்ச்சியான வாரம். உங்கள் திறமைகள் வெளிப்படுவதுடன் முக்கிய பிரமுகர்களின் தொடர்பும் கிடைக்கும். பணவரவுகள் பையை நிரப்பும். செலவுகள் வந்து கவலையை உண்டாக்கும். உறவினர்கள் உதவி செய்வார்கள்.
பெண்களுக்கு: நினைத்த காரியங்கள் நடந்து மகிழ்ச்சியை கொடுக்கும். பெற்றோரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகளவில் இருப்பதால் தேவையானவற்றை வாங்கி சந்தோஷமாக இருப்பீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: செய்யும் வேலைகளில் நெருக்கடி இல்லாவிட்டாலும், திட்டமிட்ட பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம். சம்பள உயர்வு பல மடங்கு கிடைக்கும்.

9-dhanusu.jpgதனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொது: நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களிடம் பாசம் அதிகரிக்கும். செலவுகள் வந்தாலும், அதற்கு மேல் வருமானம் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
பெண்களுக்கு: பிள்ளைகளால் பயன்கள் கிடைக்கும். உறவினர்களை கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் தாண்டவம் ஆடுவீர்கள். கணவரால் மகிழ்ச்சி உண்டாகும்.
வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் தங்களுக்கு துணை புரிவார்கள். சிறிய இடையூறுகள் வந்தாலும் அதை தகர்த்தெறிந்து செயல்படுவீர்கள். உங்களுடைய திறமையை பார்த்து சக ஊழியர்கள் அடி பணிந்து நடப்பார்கள்.

10-magaram.jpgமகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொது: சமூகத்தில் தங்களுக்கு மதிப்பும், கவுரவமும் அதிகரிப்பதுடன் பண வரவு அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்களை சரியான நேரத்தில் செய்து முடித்து உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். பொருளாதாரம் வசதி மேம்படும்.
பெண்களுக்கு: வீட்டில் உள்ள கன்னிப் பெண்களுக்கு சுபகாரியம் நடக்கும். குடும்பத்திற்குள் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அவை சுமூகமாக முடிந்து விடும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மீதுள்ள கோபம் நீங்கி அவர்களுடன் சுமூக உறவு கொள்வீர்கள். சக ஊழியர்கள் தங்களுடன் அன்போடு பழகுவார்கள்.

11-kaumbam.jpgகும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொது: தேவையில்லாமல் வேலைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும், செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உறவினர், குடும்பம், நண்பர்கள் ஆகியோரிடத்தில் நட்பு அதிகரிக்கும். வரவுகள் அதிகரித்தாலும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாது.
பெண்களுக்கு: பெண்கள் சிக்கனத்தை கையாண்டு சேமிப்பை கடைபிடித்தால் சிரமம் இருக்காது. உறவினர், கணவரிடம் அனுசரணையாக சென்றால் நீங்கள் நினைத்தது நடக்கும்.
வேலை பார்ப்போருக்கு: ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். உத்தியோகம் செய்யும் இடத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதற்கேற்ற பலன்களை பெறுவீர்கள்.

12-meenam.jpgமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொது: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், பணவரவு திருப்தியாக இருப்பதால் குடும்பத்தில் அதிக மகிழ்ச்சி நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படும் என்பதால் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை.
பெண்களுக்கு: ஆடம்பரமாக இருப்பதை தவிர்த்துவிட்டு சேமிப்பில் தங்களுடைய கவனத்தை செலுத்த வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள்.
வேலை பார்ப்போருக்கு: தங்களுடைய அபாரத் திறமையால் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுடன் இட மாறுதல் கிடைப்பதால் சந்தோஷமாக இருப்பீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கார்த்திக், சரத் கூட்டணி உறுதியானது – விரைவில் அறிவிப்பு
Next post மனைவிக்கு விமானத்தைப் பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி