பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர்கள் நியமனம்!!
கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய துணைவேந்தர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்கவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் உபுல் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.