மத்திய வங்கி பிணைமுறி விசாரணைக்காக மீண்டும் பாராளுமன்ற தெரிவுக்குழு!!
மத்திய வங்கியின் பிணை முறிகள் சம்பவம் தொடர்பில் அடுத்த பாராளுமன்றத்தில் மற்றொரு தெரிவுக்குழு நியமித்து அது சம்பந்தமாக ஆராய்ந்து பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியின் பிணை முறி வழங்களில் ஏதும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அதனை மூடி மறைப்பதற்கான எந்தத் தேவையும் இல்லையென பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கிருலப்பணை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.