கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை !!
ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்வருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹிங்குரங்கொடை ஜயந்திபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றிற்கே மேற்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு ஜூலை மாதம் 07ம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை கொலை செய்ததாக அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதன்படி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பொலன்னருவை உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.