தேசிய மற்றும் மாகாண ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு!!
புதிய ஆசிரியர் சேவை யாப்பின் படி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் 75 வீதமான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை இம்மாதம் 31ம் திகதிக்குள் வழங்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.
அத்துடன் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 15,600 பேருக்கான பதவி உயர்வுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களில் 65 வீதமானோருக்கு இதுவரை பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.