சுகாதாரத் துறையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டது – பந்துல குற்றச்சாட்டு!!

Read Time:2 Minute, 12 Second

1251176648Bandulaஉலகமே ஏற்றுக் கொண்ட இலங்கையின் சுதந்திர சுகாதார சேவையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முந்தைய அரசாங்கம் சுகாதார சேவையை கட்டியெழுப்புவதற்காக 160 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி விஞ்ஞாபனத்தின் படி பொது சுகாதார சேவையை அகற்றிவிட்டு தேசிய சுகாதார சேவை அதிகாரசபையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் மருந்துகளை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தனியாருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஆகவே சுதந்திர சுகாதார சேவையை பாதுகாப்பதற்காக போராட்டங்கள் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தெற்கில் பாரியளவில் அரச சொத்துக்கள் மற்றும் அரச அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பாரிய தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய மற்றும் மாகாண ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு!!
Next post பாரத கொலை வழக்கில் குற்றங்களை ஏற்றுக்கொள்ள துமிந்த உள்ளிட்ட 12 சந்தேகநபர்கள் மறுப்பு!!!