தேரவாத பௌத்த கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும்!!
2017இல் தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பிராந்திய வலயத்தின் தேரவாத பௌத்த கேந்திர நிலையமாக இலங்கை திகழ்ந்தது.
அந்த நிலைமையை மீளவும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எமது ஆட்சியின் கீழ் இதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்ல அபேகம பிரதேசத்தில் நடைபெற்ற சங்க சம்மேளனமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.