தபால் மூலம் வாக்களிக்கும் விஷேட தினம் இன்று!!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கும் விஷேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் தபால் மூல வாக்களிக்க முடியாமால் போன அரச உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் தமது வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்று பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மெஹமட் தெரிவித்தார்.
இன்று காலை தொடக்கம் இவர்கள் தமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.