மக்களுக்கான நிவாரணங்களை சரிவர வழங்கினேன் – மஹிந்த!!
எந்த தடைகள் இருந்த போதிலும் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை சரிவர வழங்குவதற்கு தான் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் அதிகாரத்திற்கு வந்தால் உரம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருந்தார்.