எலி கடித்து பெண் பரிதாப சாவு
அம்பாலா: பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் எலி கடித்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அம்பாலா மாவட்டம் நஹ்ரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் கைலாஷா. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவரை ஒரு எலி கடித்து விட்டது. உடனடியாக அவரை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து முல்லானா என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள், ஏற்கனவே கைலாஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர். எலி கடித்து பெண் இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரது ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.