விஷம் அருந்திய முன்னாள் பிரதேசசபைத் தலைவர்!!
கருவலகஸ்வெவ பிரதேசசபையின் முன்னாள் தலைவர் நீல் வீரசிங்க விஷம் அருந்தியமையால் நிகவரெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் முன்னதாக நீல் வீரசிங்கவை அவரது நண்பர்கள் சிலர் புத்தளம் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்க முற்பட்ட போது, அவர்கள் அவரை ஏற்க மறுத்துள்ளனர்.
அத்துடன் அருகில் இருக்கும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவரை அனுமதிக்கும் படியும் குறித்த தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் அவரது நண்பர்கள் அவரை நிகவரெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இரண்டு முறைகள் கருவலகஸ்வெவ பிரதேசசபையின் தலைவராக செயற்பட்ட நீல் வீரசிங்க, கடந்த 29ம் திகதி ஆணைமடுவில் இடம்பெற்ற கூட்டத்தில், பொது மக்கள் ஐக்கிய முன்னணியை கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார்.
இதேவேளை சில சந்தர்ப்பங்களில் போதையில் அரச அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட நீல் வீரசிங்க, நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.