தாஜூடின் மரணம் குறித்து மஹிந்த!!
ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் இணையும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
பின்னிணைப்பு
2005ம் ஆண்டு தாம் பொறுப்பேற்ற நாடு அல்ல தாம் 2015ம் ஆண்டு ஒப்படைத்தது என, இதன்போது எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் 117 ஆசனங்களைப் பெற முடியும் என நம்புவதாகவும் 113 ஆசனங்களுக்கு மேல் நிச்சயம் பெறுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகளுக்கு நிதி அளித்ததாக வௌியான தகவல் குறித்து வினவியபோது, புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது யார் என நன்றாகத் தெரியும் எனவும் புலிகளுடன் கலந்துரையாடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அந்தக் கலந்துரையாடலுக்கு பிறிதொருவரையே அனுப்பியதாகவும் தான் செல்லவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாம் முதலீட்டாளர்களை வரவழைத்து பாதாள குழுவினரை அனுப்பினோம் ஆனால் தற்போதைய அரசு பாதாள குழுவினரை வரவழைத்து முதலீட்டாளர்களை அனுப்புகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் வினவப்பட்டபோது, அந்த விசாரணைகள் உண்மையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் அவர் இங்கு மேலும் கூறியுள்ளார்.