புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!

Read Time:2 Minute, 1 Second

1118562488Untitled-1புதிய அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை 43 பில்லியன் ரூபாய்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வௌிநாட்டு இருப்புகள் 7.5 அமெரிக்க டொலர்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய அரசாங்கத்தின் திறமையான முறையிலான நிர்வாகமே இவ்வாறு வௌிநாட்டு கடன்கள் குறையக் காணரம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் படி முழு வருடத்திலும் பெறக் அனுமதிப்பட்ட வௌிநாட்டு வணிக கடன்கள் 195 பில்லியன் ரூபாய்கள். எனினும் முதல் ஆறு மாதத்தில் 43 பில்லியன் ரூபாய்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது.

இலங்கையின் வௌிநாட்டுக் கடன்கள் 2014ம் ஆண்டு யூலை மாதமளவில் அதிகளவாக காணப்பட்டது. 3,272 பில்லியன் ரூபாய்களாக அது இருந்தது.

மேலும் இலங்கை வரலாற்றில் 1986ம் ஆண்டு 70 பில்லியன் ரூபாய்களாக வௌிநாட்டுக் கடன்கள் பதிவாகியமையே ஆகக் குறைந்த கடன் பெருகையாக இருந்தது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்!!
Next post காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு பிணை!!