காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு பிணை!!
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் திணைக்கள அதிகாரிகளை எச்சரித்ததாக காத்தான்குடி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்று தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.