மத்திய வங்கி ஆளுநர், மருமகனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

Read Time:1 Minute, 47 Second

1992016585arjunமத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் கருத்து வெளியிட ஒக்டோபர் 30ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரேனுகா பெரேரா முன்வைத்த மனுவொன்றை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விசாரணை முடியும் வரை பிரதிவாதிகள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு மனுதாரர் கோரியிருந்த போதும் பிரதிவாதிகளின் கடவுச்சீட்டு இலக்கம் நீதிமன்றில் சமர்பிக்கப்படாததால் அவ்வாறான உத்தரவு ஒன்றை பிறப்பிக்க முடியாது என நீதவான் அறிவித்துள்ளார்.

நீதவானின் இந்த உத்தரவுக்கு மத்திய வங்கி ஆளுநர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் உத்தரவு தொடர்பில் திருப்தி அடையவில்லை எனில் பொறுத்தமான நீதிமன்றில் சென்று தேவையான உத்தரவுகளை பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.

அடுத்த விசாரணை ஒக்டோபர் 30ம் திகதி இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
Next post பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு 40 ஆண்டுகள் நிறைவு!!