பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு 40 ஆண்டுகள் நிறைவு!!
பின்னவல யானைகள் சரணாலயத்தின் 40 வது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று விஷேட நினைவு நாள் வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வன ஜீவராசிகள் பணிப்பாளர் அனுர டி சில்வா தலைமையில் இந்த நினைவு நாள் வைபவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னவல யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு பாற்சோறு உட்பட பழவகைகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.
பின்னவல யானைகள் சரணாலயத்தின் 40 வது ஆண்டு நினைவு தினத்தையிட்டு அங்கு கடமையாற்றும் சிரேஷ்ட ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.