அரவாணியாக மாறிய மகளை வீட்டுக்குள் வர அனுமதி மறுத்த பெற்றோர்; வீட்டுக்குள் வந்தால் தற்கொலை செய்வேன் என்று சகோதரி மிரட்டல்

Read Time:5 Minute, 0 Second

கடலூரில் பிறந்த வீட்டுக்குள் நுழைய அரவாணி போராட்டம் நடத்தி வருகிறார். வீட்டுக்குள் நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரது சகோதரி மிரட்டினார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயபால். இவரது மகன் இமயவரம்பன்(வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள தனது மாமா சங்கர் வீட்டில் வளர்ந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் வண்டிப்பாளையம் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவரது நடை உடை பாவனையில் மாற்றம் ஏற்பட்டது. அவரிடம் பெண் தன்மை அதிகம் காணப்பட்டது. இதை அறிந்து அவரது பெற்றோர் இமயவரம்பனை புறக்கணித்தனர். அவனிடம் பெற்றோர் அன்பு செலுத்தாததால் அவர் வேதனை அடைந்தார். இதனால் யாரிடமும் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை சென்றுவிட்டார். இவர் திடீரென காணாமல் போனதை அறிந்து அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடினார்கள். கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் அவரை தேடுவதை விட்டுவிட்டனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் திடீரென ஒரு நாள் இரவு வந்து இமயவரம்பன் கதவை தட்டினான். பெற்றோர் கதவை திறந்து பார்த்தபோது இமயவரம்பன் சேலை உடுத்தி தலையில் பூவும்,பொட்டும் வைத்து பெண்ணாக மாறி நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

விரட்டி அடித்தனர்

முதலில் யார் என்று அடையாளம் தெரியாததால் நீ யார்? இரவில் இங்கு ஏன் வந்தாய் என்று கேட்டார்கள். உடனே நான் தான் உங்கள் மகன் இமயவரம்பன். நான் பெண்ணாக மாறி விட்டேன். இப்போது உங்கள் மகள் மீனாவாக வந்து நிற்கிறேன். பம்பாயில் அரவாணிகள் கூட்டத்தில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று கூறினார்.

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீனாவை வீட்டுக்குள் வரக்கூடாது என்று விரட்டி அடித்தனர். இதனால் வேதனை அடைந்த மீனா கடலூரில் உள்ள அரவாணியிடம் தஞ்சம் அடைந்தார். பின்னர் அரவாணிகளுடன் மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு நடனம் கற்றுக்கொண்டு பெரிய ஓட்டல்களில் நடனம் ஆடி வந்தார்.

தற்கொலை மிரட்டல்

இந்த நிலையில் அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களை பார்க்க ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் நேற்று கடலூர் வந்தார். மீனா தனது வீட்டுக்கு சென்றபோது அவரை வீட்டுக்குள் வர கூடாது என்று அனைவரும் தடுத்தனர். அவர் நான் பிறந்து வளர்ந்த வீட்டுக்குள் ஏன் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்.

அப்போது அவருக்கும், அவரது அக்கா கயல்விழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நீ வீட்டுக்குள் வந்தால் நான் கிணற்றில் அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்வேன் என்று கூறி கயல்விழி கூறிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அந்த தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

பின்னர் இது குறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதன் பின்னர் மீனா தீபாவளிபண்டிகை வரைக்கும் தான் வண்டிப்பாளையத்தில் இருப்பேன். வீட்டுக்கு செல்லமாட்டேன் என்று கூறினார். இதை தொடர்ந்து மீனாவை அரவாணிகள் தங்களுடன் அழைத்து சென்றனர். கயல் விழி தனது வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவம் வண்டிப்பாளையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தான் கடந்து வந்த பாதை
Next post பிரகாஷ் ராஜின் புது ‘சாதனை’