முடிவெடுக்க பூவா, தலையா : அமெரிக்க நீதிபதி பணி நீக்கம்

Read Time:2 Minute, 10 Second

வழக்கில் முடிவு எடுப்பதற்காக பூவா, தலையா போட்டுப் பார்த்த நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டார். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கேட் சிட்டி நகரில், இளைஞர்கள் குற்றம் மற்றும் குடும்ப உறவுகள் கோர்ட் நீதிபதியாக இருந்தவர் ஜேம்ஸ் மைக்கேல் ஷுல். விவாகரத்து பெற்ற பெற்றோர், தங்களது குழந்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று பரஸ்பரம், கோர்ட்டில் கோரிக்கை வைத்தனர். குழந்தையின் தாயை தனது அறைக்கு வரவழைத்த நீதிபதி ஜேம்ஸ் மைக்கேல், அந்த பெண்ணின் பேன்ட்டை அவிழ்க்கச் சொன்னார். குழந்தையை யாருடன் இருக்கச் செய்வது என்பது குறித்து, ஒரு நாணயத்தை எடுத்து பூவா, தலையா போட்டுப் பார்த்தார். இது தொடர்பாக நீதிமன்ற அதிகாரிகளிடம் அந்த பெண் புகார் கூறினார். இதையடுத்து, நீதிபதி ஜேம்ஸ் மைக்கேல் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். “அமெரிக்க குடிமக்கள் நீதிபதிகளின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டுமே, நீதிமன்றத்துக்கு வரும் பிரச்னைகள் நியாயமாக தீர்க்க முடியும். வழக்கு தொடர்பானவர்கள் அனைவரும் கவுரவமாக நடத்தப்படா விட்டால், நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் போய்விடும். மக்களின் நம்பிக்கையைத் தான் நீதித்துறை அடிப்படையாக கொண்டுள்ளது’ என்று நீதிபதி பார்பரா மிலனொ கீனன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முத்தத்திற்கு வித்யா பாலன் ரெடி
Next post எலி கடித்து பெண் பரிதாப சாவு