வவுனியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவில் மட்டத்தேள்!!
வவுனியா, மில்வீதி சந்தியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் விசப்பூச்சியான மட்டத்தேள் இறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் வவுனியா, மில்வீதி சந்தியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் உணவுப் பொதியைப் பெற்ற ஒருவர் அதனை வீட்டில் சென்று பிரித்து சாப்பிட்ட போது அதனுள் விசப்பூச்சியான மட்டத்தேள் இறந்த நிலையில் காணப்பட்டமையை கண்டுள்ளார். இதனையடுத்து சுகாதார பரிசோதகர்களிடம் தெரியப்படுத்தியதையடுத்து குறித்த ஹோட்டல் சோதனை செய்யப்பட்டதுடன், ஹோட்டலுக்கு எதிராக நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.