சட்டவிரோத குடியேறிகள் அத்துமீறி நுழைவதை அரசு தடுத்து நிறுத்தும்!!

Read Time:1 Minute, 47 Second

1213810561Untitled-1சட்டவிரோத குடியேறிகள் பிரிட்டனுக்குள் அத்துமீறி நுழைவதை அரசு தடுத்து நிறுத்தும் என பிரதமர் டேவிட் கெமரன் தெரவித்திருக்கிறார்.

அகதித் தஞ்சம் கோருபவர்களில், குறிப்பிடத்தக்க அளவினரை பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கும் டேவிட் கெமரன், அனுமதியில்லாமல் நுழைபவர்களைத் தடுத்து நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

வடக்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக மத்திய தரைக் கடலைக் கடக்கும் ஆயிரக் கணக்கான மக்களை வர்ணிப்பதற்கு, மொய்க்கும் ஈக்கள் அல்லது எறும்புகளின் கூட்டத்துக்கு பயன்படுத்தும் ´swarm´ என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியதை கெமரன் நியாயப்படுத்தியுள்ளார்.

மக்களை இழிவுபடுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அதிகளவில் குடியேறிகள் வருவதை விளங்கப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் குடியேறிகளை கட்டுப்படுத்தும் தனது கொள்கையையும் கெமெரன் நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.

மக்களுக்கு தஞ்சம் அளிக்கும் விஷயத்தில் தாராள மனப்பான்மையுடன் பிரிட்டன் எப்போதும் நடந்துவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் கைது!!
Next post போலி வாக்குச் சீட்டுக்களுடன் மூவர் சிக்கினர்!!