போலி வாக்குச் சீட்டுக்களுடன் மூவர் சிக்கினர்!!
கண்டி – தலாதுஓய பகுதியில் இருந்து கலஹா நோக்கி போலி வாக்குச் சீட்டுக்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 1324 போலி வாக்குச் சீட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதன்போது தேர்தல் பிரச்சார கையேடுகள் 323 மற்றும் விருப்பு இலக்கங்கள் அடங்கிய சிறிய ஸ்டிக்கர்கள் 1482ம் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் தலாதுஓய பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.