வாக்குப் பெட்டிகள் இன்று கொண்டு செல்லப்படும்!!
2015 பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கையிலுள்ள தீவுப் பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்ல கடற்படையினரின் உதவி பெறப்பட்டுள்ளது.