சிறுமி துஷ்பிரயோகம் – முன்னாள் பிரதேசசபை உபதலைவர் கைது!!
யக்கலமுல்லை பிரதேசசபையின் முன்னாள் உப தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது, மாகேதர – ஹேனவத்தை பகுதியில் வைத்து 14 வயதான சிறுமி ஒருவர் முன்னாள் உப தலைவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் என கூறப்படுகின்றது.
இவரை இன்று காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யக்கலமுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.