அமைதியான மற்றும் நீதியான தேர்தல் இடம்பெற்றது – தேர்தல்கள் ஆணையாளர்!!

Read Time:3 Minute, 13 Second

776326605Desapriyaநடைபெற்ற 2015ம் அண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையிலும் நீதியானதாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் இன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை கடைசி மணித்தியாலயத்திலேயே கிடைக்கப் பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்ைககள் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள 12000 வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து 28000 முறைப்பாடுகள் குறுந்தகவலினூடாக கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்பதுடன் சிறிய சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் பெற்றுக் கொண்ட தகவல்களின் படி எந்தவித பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெற்றவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்தாலும் தேர்தல் சட்டங்களை மீறுவோறுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாவட்ட மட்டங்களில் இதுவரை வௌியாகியுள்ள வாக்களிப்பு வீதங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் அவையனைத்தும் பொய்யானவை என்றும், அவை மாறுபடலாம் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் குறப்படும் வாக்களிப்பு வீதங்களை வௌியிட வேண்டியது தானே என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தேர்தல் முடிவுகளை நள்ளிரவு 12 மணியின் பின்னரே வௌியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானைக்கு வழங்கிய உணவில் பிளேடு: பாகன் விஷம் குடித்து தற்கொலை!!
Next post ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் பதவி நீக்கம்!!