பெற்ற மகளை இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை – உடந்தையாக இருந்த மனைவி கைது!!
பெற்ற மகள் என்றும் கருதாமல் கடந்த 16 ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் மீது 22 வயது இளம்பெண் அளித்த புகாரையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நகரத்தை சேர்ந்த அந்தப் பெண் இதுதொடர்பாக மாவட்ட போலீசில் சூப்பிரண்ட்டை நேரில் சந்தித்து அளித்த புகாரில், சிறுமி என்றும் பாராமல் தனது ஆறாவது வயதில் இருந்து பெற்ற தந்தையே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், அவர் மூலம் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து இவ்வாறு இம்சித்து வந்த அவரது செய்கையைப் பற்றி தாயிடம் கூறியபோது, இதைப்பற்றி கண்டுகொள்ளாத அவர், கணவனுக்கு உடந்தையாக இருந்து வந்ததாகவும், தந்தையின் மூலம் தற்போதும் இரண்டாம் முறையாக எனது வயிற்றில் வளர்ந்துவரும் மூன்று மாத கருவை கலைக்கும்படி பெற்றோர் வற்புறுத்தி வருவதாகவும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அந்த ஈவிரக்கமில்லாத தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, சூப்பிரண்ட் அணில் பராஸ்கர் உத்தரவிட்டார். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளம்பெண்ணின் பெற்றோரை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை ஐந்து நாள் விசாரணைக் காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.