வாழ்த்து தெரிவிக்க இலங்கை வரும் நிஸா பிஸ்வால்!!
மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் அடுத்த வாரம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஒருநாள் விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதே அவரின் இந்த விஜயத்தின் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது.
இதன்போது நிஸா பிஸ்வால் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.