பெருந் தொகை இந்திய கடலட்டைகளுடன் இருவர் சிக்கினர்!!
கல்பிட்டி – முகத்துவாரம் கடற்பகுதியில் கடலட்டைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கல்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 655 கிலோ கிராம் கடலட்டைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை இவை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.