கங்கையில் குதித்த பௌத்த துறவி – தேடும் பணிகள் தீவிரம்!!
மாத்தறை – திஹகோட – பண்டத்தர பாலத்தில் இருந்து பௌத்த துறவி ஒருவர் நில்வலா கங்கையில் குதித்துள்ளார்.
இன்று காலை அவர் இவ்வாறு கங்கையில் குதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவர் பத்தேகம பிரதேச விஹாரை ஒன்றைச் சேர்ந்த 82 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து துறவியைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.