தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும் – ஹரிகரன் (கட்டுரை)!!

Read Time:16 Minute, 46 Second

timthumb (12)கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­காக, மேற்­கொள்ளப்பட்ட முயற்­சி­களும் தான் தோற்­கடிக்­கப்­பட்­டன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­கடிப்­ப­தற்­கான முயற்­சியில், மிக முக்­கி­ய­மான பாத்­தி­ரத்தை வகித்த புறக்­கா­ர­ணிகள் இரண்டு.

ஒன்று புலம்­பெயர் புலியாதரவு தமி­ழர்கள். இரண்­டா­வது சமூக ஊட­கங்கள் மற்றும் புலம்­பெயர் தமிழ் ஊட­கங்களின் ஒரு பகுதி.

இந்த தேர்­தலில், இந்த இரண்டு கார­ணி­க­ளுமே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான பிர­சா­ரங்­க­ளுக்கு வலு­வாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

அர­பு­லகப் புரட்­சி­யின்­போது, சமூக ஊட­கங்கள் கணி­ச­மான செல்­வாக்கைச் செலுத்­தி­யி­ருந்­தன.

டியூ­னிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடு­களில் நில­விய சர்­வா­தி­கார ஆட்­சி­களை அகற்­று­வதில் சமூக ஊடகங்­களும் இணை­யங்­களும் மேற்­கு­லக நாடு­களால் மிக­நுட்­ப­மாகத் திட்­ட­மிட்டுப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

அதற்குப் பின்னர், எல்லா நாடு­க­ளுமே, சமூக ஊட­கங்கள் குறித்து அதில் எழுப்­பப்­படும் கருத்­துக்கள், விவாதங்கள் குறித்து உன்­னிப்­பாக கண்­கா­ணிக்கத் தொடங்­கின.

இலங்­கை­யிலும், கூட ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யதில் சமூக ஊட­கங்­களின் பங்கு கணிச­மா­னது என்­பதை மறுக்க முடி­யாது.

ஜன­வரி 8 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்­க­டிப்­பதில், சமூக ஊட­கங்­களின் மூலம் இளம் சமூ­கத்­தினர் ஏற்­ப­டுத்­திய ஆக்­க­பூர்­வ­மான கருத்­தா­டல்­களும், கருத்­துக்­களும் முக்­கிய பங்­காற்­றி­யி­ருந்­தன.

ஜனா­தி­பதி தேர்தல் காலங்­களில், மஹிந்த ராஜபக் ஷவி­னாலும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளி­னாலும் அர­பு­லக புரட்சிப் போல இலங்­கையில் ஏற்­ப­டுத்தி விட முடி­யா­தென்று கூறப்­பட்­டது.

அத்­த­கை­ய­தொரு புரட்­சிக்­கான கருத்­துக்கள் சமூக ஊட­கங்­களில் பர­வி­யதை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் உணர்ந்­தி­ருந்­தது.

அது­போ­லவே அப்­போது மஹிந்த ராஜபக் ஷவும் சமூக ஊட­கங்­களை தனது பிர­சா­ரங்­க­ளுக்கு மிகக் கவ­ன­மாகப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அதற்­கென இந்­திய நிபு­ணர்­களை பணிக்கு அமர்த்­தி­யி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின. எனினும், மஹிந்த ராஜபக் ஷ ஜன­வரி 8 தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்டார்.

மஹிந்த ராஜபக் ஷ தோற்­க­டிக்­கப்­பட்­ட­தற்கும், சமூக ஊட­கங்கள் கணி­ச­மான செல்­வாக்கைச் செலுத்­தி­யமை பின்னர் உறு­தி­யா­கி­யி­ருந்­தது.

இந்தக் கட்­டத்தில், மஹிந்த ராஜபக் ஷ சமூக ஊட­கங்­களை தனது பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கு அவ்­வ­ள­வாகப் பயன்­படுத்திக் கொள்­ள­வில்லை என்றே கூறலாம்.

அவ­ரது பேஸ்புக் கணக்கு இம்­முறை தேர்தல் பிர­சார காலங்­களில் மிக­முக்­கி­ய­மான நேரங்­களில் எல்லாம் உறங்கிக் கொண்­டி­ருந்­தது.

அதே­வேளை, இந்­த­முறை பாரா­ளு­மன்றத் தேர்­தலில், பெரும்­பா­லான வேட்­பா­ளர்கள் சமூக ஊட­கங்­களை தமது பிர­சா­ரங்­க­ளுக்­கான சுல­ப­மான வழி­மு­றை­யாகத் தெரிவு செய்­தி­ருந்­தனர்.

அதிகம் கட்­டுப்­பா­டுகள் இல்­லாத- கூடுதல் சுதந்­தி­ரத்­துடன் கருத்­துக்­களை வெளி­யிடக் கூடிய, ஒரு ஊட­க­மாக இது இருந்­ததால், மரபு­ரீ­தி­யான பிர­சா­ரங்­க­ளுக்கு மாற்­றான அவ­தூறுப் பிர­சா­ரங்­க­ளுக்கும் இது வாய்ப்­பான கள­மாக இருந்­தது.

பெரும்­பா­லான கட்­சி­களும் வேட்­பா­ளர்­களும் கொள்கை ரீதி­யாகத் தமது நிலைப்­பாட்டை முன்­னி­றுத்தி பிர­சாரம் செய்யும் தகை­திறன் இன்­றியே காணப்­பட்­டனர்.

அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு, மொட்டைக் கடி­தங்கள் போலவும், ஆதா­ர­மில்­லாத தக­வல்கள், புனை­யப்­பட்ட படங்கள், வீடி­யோக்கள் மூலமும் அவ­தூறுப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான கள­மாக இந்த சமூக ஊட­கங்கள் வாய்த்­தி­ருந்­தன.

பெரும்­பா­லான வேட்­பா­ளர்கள் தமக்கு ஆத­ர­வான பிர­சா­ரங்­க­ளுக்கே சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க, வடக்கு கிழக்கில், அதிலும் குறிப்­பாக, யாழ்ப்­பா­ணத்தை மையப்­ப­டுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்டிப்­ப­தற்­காக ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வகையில் அவை செயற்­ப­டுத்­தப்­பட்­டன.

இத்­த­கை­ய­தொரு நவீன ஊடகப் புரட்­சியின் மூலம், வடக்கு, கிழக்கு தமி­ழர்­க­ளுக்­கான தலை­மைத்­து­வத்தில் இருந்து கூட்­ட­மைப்பை அகற்றி விடலாம் என்று சில தரப்­பினர் திட்­ட­மிட்­டி­ருந்­தனர்.

இதில் முக்­கிய பங்­கா­ளர்­க­ளாக இருந்­த­வர்கள் புலம்­பெயர் தமி­ழர்கள்.

தமது கைக்குள் அகப்­ப­டாத கூட்­ட­மைப்பை எப்­ப­டி­யா­வது தோற்­க­டித்து விட வேண்டும் என்­பதில், புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­லுள்ள கடும் போக்­கா­ளர்கள் உறு­தி­யா­கவே இருந்­தனர்.

வடக்கு, கிழக்­கிற்கு புதிய தலை­மைத்­துவம் ஒன்றைக் கொண்டு வரும் இவர்­களின் முயற்சி படு­தோல்­வியில் முடிந்­தி­ருக்­கி­றது.

புலம்­பெயர் தமி­ழர்கள், வடக்கு, கிழக்கில் உள்ள தமி­ழர்­களின் வாக்­கு­களைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக மாற முயன்று தோற்றுப் போனது இது தான் முதல் முறை­யல்ல.

ஏற்­க­னவே, வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலின் போது, கடந்த ஜன­வ­ரியில் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது, இப்­போது நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது என்று எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் புலம்­பெயர் தமி­ழர்கள் மத்­தியில் உள்ள கடும்­போக்­கா­ளர்கள் இந்த விட­யத்தில் தோல்வி கண்­டி­ருக்­கின்­றனர்.

இலங்கைத் தமிழர் அர­சி­யலில் புலம்­பெயர் தமி­ழர்கள் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை வழங்­கத்­தக்க நிலையில் இருந்­தாலும், இங்­குள்ள தமி­ழர்­களின் வாக்­கு­ரி­மையைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக அவர்கள் இருக்க முடி­யாது என்ற உண்மை மீண்டும் மீண்டும் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சமூக ஊடகங்களும் – ஹரிகரன் வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலை புறக்­க­ணிக்க வேண்டும் என்றும், ஜனா­தி­பதி தேர்­தலை புறக்­க­ணிக்க வேண்டும் என்றும், இப்­போது கூட்­ட­மைப்பைத் தோற்­க­டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் புலம்­பெயர் தமி­ழர்கள் கடு­மை­யான அழுத்­தங்­களைக் கொடுத்­தனர்.

சமூக ஊட­கங்கள் மூலமும், இணைய ஊட­கங்கள் மூலமும் இவர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பிர­சா­ரங்கள் படுதோல்வி கண்­டி­ருக்­கின்­றன.

இதில் மிக­வே­டிக்கை என்­ன­வென்றால், வாக்­க­ளிக்கும் தமி­ழர்கள், வடக்கு கிழக்கில் இருக்க பிரான்ஸின் லாசப்­ப­லிலும், பிரித்­தா­னி­யாவின் லண்­ட­னிலும் வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக சுவ­ரொட்­டி­களை ஒட்டும் அள­வுக்கு புலம்­பெயர் தமி­ழர்­களின் அர­சியல் செயற்­பா­டுகள் சந்தி சிரிக்கும் அளவில் இருந்­தன.

தனி­ந­பர்­களை குறி­வைத்தும், கீழ்த்­த­ர­மாக விமர்­சித்தும், முன்­னெ­டுக்­கப்­பட்ட பிர­சா­ரங்கள் அனைத்­துமே தோல்­வி­யில்தான் முடிந்­தன.

புலம்­பெயர் ஊட­கங்­களால் இரா.சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் மிக­மோ­ச­மாக — கேவ­ல­மாக விமர்­சிக்­கப்­பட்­டனர்.

அவை மனித ஒழுக்கம், ஊடக நெறி­மு­றை­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­தா­கவும் இருந்­தன.

அத்­த­கைய பிர­சா­ரங்கள் அவ­தூ­றுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­ப­வரை விட, அவ­தூறு செய்­ப­வர்­க­ளுக்­குத்தான் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

அது தான் வாக்­க­ளிப்பின் போதும் நடந்­தி­ருக்­கி­றது.

**இத்­த­கைய பிர­சா­ரங்கள் கூட்­ட­மைப்­புக்கு எதிர்­பா­ராத பலத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

அதை­விட புலம்­பெயர் ஊட­கங்­களின் பிர­சா­ரங்­களில் குரோ­தங்­களும், வன்­மங்­களும் நிறைந்­தி­ருந்­ததே தவிர, உண்­மையும், நேர்­மையும், ஆரோக்­கி­ய­மான விமர்­ச­னங்­களும் இருக்­க­வில்லை.

இதனால் முன்­னுக்­குப்பின் முர­ணா­கவும் செயற்­பட்டுக் கொண்­டன.

உதா­ர­ணத்­துக்கு சுமந்­திரன் மீது தொடர் தாக்­கு­தல்­களை நடத்தி வந்த புலம்­பெயர் ஊட­கங்கள், அவ­ருக்கு செல்­வாக்கு இல்லை, தோற்­க­டிக்­கப்­ப­டுவார் என்று குறிப்­பிட்டு வந்­தன.

தேர்­த­லுக்கு ஓரிரு நாட்கள் முன்­ன­தாக அவை வெளி­யிட்ட ஒரு செய்­தியில், சுமந்­திரன் அமைச்சர் பத­வியை ஏற்கப் போவ­தா­கவும், வட­ம­ராட்­சியில் உள்ள அவ­ருக்கு மூன்­ற­டுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டது.

சுமந்­திரன் அமைச்சர் பத­வியை ஏற்றுக் கொள்­வ­தாயின் தேர்­தலில் வெற்றி பெற வேண்டும். அல்­லது தேசியப் பட்­டியல் ஆச­னத்தைப் பெற வேண்டும்.

தேர்­த­லுக்கு முன்­னரே அவர் அமைச்­ச­ரா­கிறார் என்றால், அவர் வெற்றி பெறும் வாய்ப்­புள்­ள­வ­ராகத் தானே வாக்­கா­ளர்கள் கரு­து­வார்கள் என்ற சாதா­ரண தர்க்க ரீதி­யான விளக்­கத்தைக் கூட அந்த ஊட­கங்கள் கொண்­டி­ருக்­க­வில்லை.

அதை­விட, மூன்­ற­டுக்குப் பாது­காப்பு இல்­லையா என்­பது, உள்­ளூரில் இருக்கும் வாக்­க­ளிக்கப் போகும் மக்களுக்கு தெரியும் என்­பதை புலம்­பெயர் ஊட­கங்கள் கொஞ்­சமும் சிந்­தித்து பார்க்­க­வில்லை.

யாழ்ப்­பா­ணத்தில் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்ற 529,239 வாக்­கா­ளர்­களில், நான்கு இலட்சம் பேர் கைத் தொலை­பேசி பாவ­னை­யா­ளர்கள் என்றும் அதில் பாதிப் பேர் கைத்­தொ­லை­பேசி மூலம் இணை­யத்தைப் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் என்றும் சட்­ட­பீட விரி­வு­ரை­யாளர் ஒருவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவர்கள் மத்­தியில், இந்த சமூக ஊட­கங்­களும், இணைய ஊட­கங்­களும் தாக்­கத்தைச் செலுத்தும் என்று பொது­வாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் அதற்கு எதிர்­மா­றான முடி­வு­க­ளையே தேர்தல் முடி­வுகள் காட்­டி­யி­ருந்­தன.

இணை­யமும், சமூக ஊட­கங்­களும், புலம்­பெயர் தமி­ழர்­களும், இங்­குள்ள மக்­களின் மீது செல்­வாக்குச் செலுத்தும் முக்­கிய கார­ணிகள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆனால், அவை தமிழ் மக்­களின் அர­சியல் தலை­வி­தியை தீர்­மா­னிக்கும் திறன் கொண்­ட­வை­தானா என்ற கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கின்­றது தேர்தல் முடிவு.

ஏனென்றால், அர­சியல் ரீதி­யாக இணையம், சமூக ஊட­கங்கள், மற்றும் புலம்­பெயர் தமி­ழர்கள் முடி­வெ­டுக்கும் சக்­தி­யாக மாறி­யி­ருந்தால், தமிழத் தேசிய மக்கள் முன்­னணி தான் வெற்றி பெற்­றி­ருக்க வேண்டும்.

குறைந்­தது மூன்று இடங்­க­ளை­யா­வது அந்தக் கட்சி பெற்­றி­ருக்க வேண்டும்.

ஆனால், கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்று எல்லாவற்றுக்கும் பின்னால் தள்ளப்பட்டது அந்தக் கட்சி.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள், பிரசாரங்களின் மூலம், தமிழ் மக்களைச் சென்றடைந்திருந்தால், சமூக ஊடகங்களை அறிவார்ந்த முறையிலான கருத்தாடல்களுக்கான களமாகப் பயன்படுத்தியிருந்தால், இத்தகைய மோசமான பின்னடைவு ஒன்றைச் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது.

அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்ற பெயரில் அதனை படுகுழிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அரசியல் அறிவு நிரம்பியவர்கள். அவர்கள் எல்லாப் பிரசார மாயைகளுக்கும் எடுபடுபவர்கள் அல்ல.

அவர்கள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள் என்பதை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தாயகத்தில உள்ள தமிழர்களுக்கு தோள் கொடுக்கலாமே தவிர, அவர்களை வழி நடத்த முடியாது என்பதை, புலம்பெயர் தமிழர்களுக்கு இந்த தேர்தல் முடிவு மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுமார் 50 முதல் 60 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வார்கள்!!
Next post தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்…!!!