சுமார் 50 முதல் 60 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வார்கள்!!
சுமார் 50 முதல் 60 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாமும் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் எதிர்க்கட்சியில் அமரப் போவதாக ஜனாதிபதியின் செயலாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக தேசிய அரசாங்கத்தின் தேவை எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சவால்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக இவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.