பாம்பு என்றால் படையும் நடுங்கும்
Read Time:59 Second
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கோ பாம்பைப் பார்த்தால்தான் விளையாடவே தோன்றும் போலிருக்கிறது. படத்தில் காணும் ஜாக்கி பிப்பிக்கும் ஏதாவது செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை. இதற்காக கண்ணாடி குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு 87 பாம்புகளை மேலே படரவிட்டுக்கொண்டு 45 நிமிடங்கள் இருந்திருக்கிறார். இதன் மூலம் 12 பாம்புகளுடன் இதுபோல விளையாடிய தனது சாதனையைத் தானே முறியடித்திருக்கிறார். டெக்சாஸ் மாகாணத்தின் டப்ளினில்தான் இந்த படை நடுங்கும் காட்சி.