சரணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மற்றைய மூவரும் பிணையில்!!
தேர்தல் சமயத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இவருக்கு எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்குமாறு கம்பஹா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவளை குறித்த சம்பவம் தொடர்பில் சரண குணவர்த்தனவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இவர்கள் 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.