யோகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்!!

Read Time:3 Minute, 34 Second

1437699563Yogeswaranமட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அவர்களுடைய மாவட்டத்திற்கு மாற்றி தமிழ் பேசும் சமூகத்தினரை இங்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த அரசாங்கத்தினால் விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு நீண்ட காலத்தின் பின் தற்போது நியமனம் வழங்கப்பட்டதாக அறிகின்றேன்.

இவ்வேளை இந்நியமனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 தமிழர்களுக்கும், 75 சிங்களவர்களுக்கும், 3 முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 75 சிங்களவர்களும் வடக்கு கிழக்கு சாராத வெளி மாகாணத்தை சேர்ந்தவர்கள். அத்தோடு வட மாகாணத்தில் வழங்கப்பட்ட 361 விவசாய ஆராட்சி உதவியாளர் நிமயனத்தில் 29 பேர் மாத்திரமே தமிழர்கள். அதிலும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்து எவரும் நியமிக்கப்படவில்லை.

தற்போது தங்கள் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள நல்லாட்சி இந்நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதாக அமைந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களை முக்கியமாக கருத்தில் கொண்டு நடாத்தப்பட்ட இப்போட்டிப் பரீட்சையில் வெளி மாகாணத்தை சேர்ந்த 75 சிங்கள சகோதர சகோதரிகள் உள்வாங்கப்பட்டமை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தொழில் ரீதியான உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது.

எனவே தயவு செய்து தற்போது வழங்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் உள்வாங்கப்பட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த 75 உத்தியோகதர்களையும், அவர்களது பகுதிக்கு இடமாற்றி விட்டு இவ்விடத்திற்கு வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் சமூகத்துக்கு பெரும்பான்மையாகவும், அத்தோடு வடக்கு கிழக்கு பகுதியில் ஏனைய சமூகத்துக்குமாக இவ் உத்தியோகத்தை வழங்கி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.

தங்களது அன்பும், ஆதரவும் இந்நடவடிக்கை சார்பாக கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மற்றைய மூவரும் பிணையில்!!
Next post ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை! மறுக்கும் தென்னாபிரிக்கா!!