By 7 November 2007

ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி பத விப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்-அமைச்சர் ஆகிய கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூல மாக அதிகாரபூர்வமாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரி வித்து இருந்தார். இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து, மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை கலைக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். அதற்குக் கருணாநிதி தனக்கே உரித்தான பாணியில் “எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது அதனால் தான் இவ்வாறு எழுதினேன்” என்கிறார். இவர் உடம்பில் மட்டும் தான் தமிழ் ரத்தம் ஓடுகிறதா? கருணாநிதி எந்த அர்த்தத்தில் இவ்வாறு சொல்கிறார் என்பது தெரியும். நான் மைசூரில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார். நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன். தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ் தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும் போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்தவரையும் தமிழர் என ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு எனக்கு தமிழின உணர்வு ஆரம்பம் முதலே இருந்துள்ளது என் பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1972 ஆம் ஆண்டு என்னுடைய 24 ஆவது வயதில் “கங்கா கவுரி” என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூருக்குப் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் நான் அளித்த பேட்டி அங்குள்ள பத்திரிகைகளிலே வெளி வந்திருந்தது. அந்தப் பேட்டியில் நிருபர், “நீங்கள் கன்னடியர் தானேப” என்று கேட்டிருந்தார்.

அதற்கு நான் “இல்லை” என்று தெரிவித்தேன். உடனே நிருபர் “நீங்கள் மைசூரில் தானே பிறந்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு “ஆமாம்” என்று சொன்னது மட்டும் அல்லாமல், “நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தவள், என்னுடைய தாய் மொழி தமிழ், நான் ஒரு தமிழச்சி” என்றும் தெரிவித்தேன். இதைப் பார்த்த கன்னட வெறியர்கள் கத்தி, வாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் படப்பிடிப்பு நடைபெற்ற பிரிமியர் ஸ்டுடியோவிற்குத் திரண்டு வந்து விட்டார்கள். அந்தப் படத்தினுடைய தயாரிப்பாளர் பி.ஆர். பந்தலு நடிகர்கள் ஜெமினி கணேசன், அசோகன் ஆகியோரும் அந்தப் படப்பிடிப்பில் என்னுடன் இருந்தனர். திரண்டு வந்த அந்த கன்னட வெறியர்கள் சுமார் 1000 பேர் வெளியிலே கூடி “கன்னட துரோகியே மன்னிப்பு கேள்!” என்று பெரிய ரகளை செய்து படப்பிடிப்பு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்துவிட்டார்கள்.

“கன்னடியர் ஆகிய நீ, தமிழச்சி என்று எப்படி பேட்டி கொடுக்கலாம்ப நீ கன்னடியர் தான் என்று சொல்” என்று மிரட்டினார்கள். “நான் இல்லாததை எப்படிச் சொல்ல முடியும்ப” என்று தெரிவித்தேன். உடனே அவர்கள் என்னை தாக்க வந்தார்கள். போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வரவில்லை. பிரச்சினை கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்தது. பந்தலு இந்தப் படப்பிடிப்பு சம்பந்தமான செய்திகளை சேகரிப்பதற்காக சென்னையில் இருந்து தமிழ் பத்திரிகை நிருபர்கள் குழுவை அழைத்து வந்திருந்தார்.

அவர்கள் அங்கே தான் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இதற்கு சாட்சி. அந்தக் கன்னட வெறியர்கள் “நீ கன்னடியர் என்று ஒத்துக் கொள்! இல்லையென்றால் குத்துவோம், வெட்டுவோம்!” என்று கூச்சலிட்டார்கள். உடனிருந்த பந்தலு, ஜெமினி கணேசன், அசோகன் ஆகி யோர் “எதுக்கம்மா வம்புப போலீஸ் வேறு இன்னும் வர வில்லை.

அவர்கள் கேட்பது போல் சொல்லிவிடு” என்று கூறி னார்கள். நான் அவர்கள் சொல்வதை ஏற்காமல், கன்னட மண்ணில், தமிழ் உணர்வுடன், வீரமறத்தியாக அன்றைக்கே “நான் ஒரு தமிழச்சி” என்று பெருமையுடன் தைரியமாகச் சொன்னேன்.

கர்நாடகாவில் பிறந்ததால் கன்னடியர் ஆவது கிடையாது. தமிழ் நாட்டில் பஞ்சாபி குடும்பங்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை. அதே போல், இலங்கையில் பிறக்கின்ற தமிழர்களை சிங்களர்கள் என்று சொல்வதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்று தான் சொல்கின்றோம். நான் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி.

இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கும், அ.தி.மு.க.வுக்கு எப்போதும் பரிவும், பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் நல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோரது விருப்பமும் ஆகும். ஆனால் கருணாநிதி, கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த போதும், பலர் மரணமடைந்த போதும் வருத்தம் தெரிவிக்காமல், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் மறைவிற்கு மட்டும் தற்போது கவிதை வடி வில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
இதன் தீவிரத்தை உணராது மத்திய அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதால், இவ்விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரி வித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Comments are closed.