டக்ளஸ் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு!!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
“நாம் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளோம்.. ஏனெனில் அவர்கள் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக உறுதியளித்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது முடிவு பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளார்.