வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!!
சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் சகோதரருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் தினத்தை வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த வழக்கை டிசம்பர் 2ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் விசாரணை செய்யப்படவுள்ளது.