தளபதி வீட்டில் ‘தல’ க்கு விருந்து?-திகைப்பூட்டும் திருப்பங்கள்

Read Time:2 Minute, 28 Second

04.jpgajith-shalini_7717_4.jpgநம்பினால் நம்புங்கள்… நம்பாவிட்டாலும் கவலையில்லை. இந்த செய்தி நம் காதுக்கு வந்தபோது நாமும் ‘டவுட்’ ராமாசாமியாகதான் இருந்தோம். விசாரித்தால், ஆமாம் என்கிறார்கள் அஜீத் தரப்பில். சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு விஜய் வீட்டுக்கு சென்று அவர் கொடுத்த ஸ்பெஷல் விருந்தை அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார் அஜீத். திரையுலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவருக்கும் இடையில் பர்சனல் கோபங்களும் நிறைய என்பார்கள். ஒவ்வொருமுறையும் விஜய் பற்றி அஜீத்திடம் ‘போட்டுக்’ கொடுக்கும் சிலரிடம், அப்படியா.. இருந்திட்டு போகட்டுமே என்பாராம் அஜீத் கூலாக! அப்படிப்பட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரு பாடல் காட்சி. அந்த காட்சியில் அஜீத்தை போலவே தொப்பை வைத்துக் கொண்டு ஆடினார் விஜய். அதன்பின் வெறியோடு தன் தொப்பையை குறைத்தார் அஜீத். இதெல்லாம் நேற்றோடு போச்சு. இன்று நாங்கள் பிரண்ட்ஸ் என்பது மாதிரி, சமீபத்தில் நடந்து அரசு விருது வழங்கும் விழாவில் அருகருகே அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும். இந்த சந்திப்பிற்கு பிறகுதான் அஜீத்தை தன் வீட்டு விருந்திற்கு அழைத்திருக்கிறார் விஜய். ஆரம்ப காலங்களில் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது, அஜீத்திற்கும் சேர்த்து, விஜய் வீட்டிலிருந்து சாப்பாடு வருமாம். மேற்படி விருந்தின் போது அந்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாராம் அஜீத். தலையும் தளபதியும் ஒன்னாயிட்டாங்க… ரசிக கண்ணுங்களா, இனிமேலாவது சமர்த்தா தோள் மேல கைய போட்டுக்கணும்… என்னா!?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈ.என்.டி.எல்.எப்பும், நிதர்சனமும் சேர்ந்து நடாத்தும் பிரச்சார விபச்சாரம்!!
Next post நடுரோட்டில் பாம்பிற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: 21 பாம்பு குட்டிகள் பிறந்தன