யால விலங்குகள் சரணாலயத்திற்கு பூட்டு!!
யால விலங்குகள் சரணாலயத்தை அடுத்த மாதம் 6ம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெயில் காலநிலை நிலவுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் காலநிலையை அடிப்படையாகக் கொண்டு யால விலங்குகள் சரணாலயம் மூடி வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, வெயில் காலநிலை நிலவும் பகுதிகளுக்கு கொள்கலன் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.