சீனாவில் அதிகரித்து வரும் எயிட்ஸ் நோயாளர்கள்

Read Time:1 Minute, 51 Second

சீனாவில் மாதத்திற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி./ எயிட்ஸ் தொற்கு உள்ளாகின்றனரென அந்நாட்டு ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்.ஐ.வி.பாதிப்பிற்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் முறைகேடான பாலியல் தொடர்பு காரணமாகவே பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் சரசரியாக 3,223 பேர் மாதம் ஒன்றில் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதேநேரம், இந்த ஆண்டிலேயே 3,000 பேர் இதன் பாதிப்பால் உயிரிழந்துள்ளானரென்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக் காலமாக சீனாவில் அதிகரித்துவரும் எச்.ஐ.வி.பாதிப்பினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனரெனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் சீனாவில் 220,000 பேர்.எச்.ஐ.வி.தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரென சீனா தெரிவித்திருந்த அதேவேளை, அந்நாட்டில் 650,000 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருக்கலாமென ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அவுஸ்திரேலியா மண்ணில் முரளிதரன்; சாதனைக்கு வந்த சோதனை!!
Next post ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 6 எம்.பி.க்கள்- 100 பேர் பலி