நியூஸிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி!!
நியூஸிலாந்தின் – ரிவஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்தில் 44 வயதான பிரதீப் எதிரிசிங்க என்பவரே பலியாகியுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தில் வேனில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் இத்தாலி பிரஜையான குறித்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.