ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம்!!
வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலை மற்றும் மக்களின் சிரமங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.