எண்ணெய் கலந்த நீர் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை!!
நீர் வழங்கள் தொடர்பில் எந்தவொரு பயமும் தேவையில்லை என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நேற்று களனி கங்கையில் எண்ணை கலந்தமையால் சில மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்பட்டது.
எனினும் சிறிது நேரத்தில் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக, தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகானமைப்புச் சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் எண்ணெய் கலந்த நீர் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.