இந்திய அணி பலமான நிலையில்!!
இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
இலங்கை அணி சார்பாக குசல் ஜனித் பெரேரா 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக சர்மா 55 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 312 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் புஜாரா ஆட்டமிழக்காமல் 145 பெற்றுக் கொண்டுள்ளார்..
இதன்படி 111 ஓட்டங்களால் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.