கே.பி மீது இதுவரை குற்றம் இல்லை!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் என கருதப்படும் குமரன் பத்மநாதன் என்ற கேபி தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
கேபி.யை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு இன்று (31) விசாரணைக்கு வந்தபோது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இதனை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 28ம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றில் சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.