உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!
மீரிகம – கல்எலிய பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் சிக்கியுள்ளார்.
சந்தேகநபர் அத்தனகல நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.