போலி நாணயத்தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் கைது!!
மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
500 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்த கடை ஒன்றில் பொருட்கள் வாங்க முனைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து போலி 5000 ரூபா நாணயத்தாள் 12, போலி 1000 ரூபா நாணயத்தாள் 15 மற்றும் போலி 500 ரூபா நாணயத்தாள் 06 மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.