ஓமந்தை சோதனைச் சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்!!

Read Time:3 Minute, 36 Second

947260921Untitled-1வவுனியா ஒமந்தை சோதனைச் சாவடியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளமையை தாம் வரவேற்பதாகவும், இச்சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகுமென்றும், இது இன்றைய அமைதிச் சூழலில் வடக்கு தெற்கு மக்களின் நல்லுறவை மேலும் வளர்த்தெடுப்பதற்கான அனுகூலமாக அமையும் என்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஒமந்தை சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏ9 வீதியில் வவுனியா ஒமந்தை பகுதியில் 1997 ஆம் ஆண்டு முதல் சோதனைச் சாவடி நிறுவப்பட்டு மக்களும் அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் மட்டுமன்றி வாகனங்களும் அவற்றில் கொண்டு செல்லப்படும் பொருட்களும் படைத்தரப்பினரால் சோதனையிடப்பட்டு வந்துள்ளன.

கடந்த காலங்களில் இச்சோதனைச் சாவடி ஊடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும், அவகௌரவங்களையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் தற்போது அமைதியான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் சோதனைச் சாவடியூடாக பயணிக்கும் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சோதனை நடவடிக்கை நீக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பை நாம் வரவேற்கும் அதேவேளை இதனூடாக வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவை மேலும் வளர்த்தெடுக்க முடியும் என்பதுடன் சிங்கள, தமிழ் மக்களிடையேயான புரிந்துணர்வையும் நல்லுறவையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.

அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய ஒமந்தை சோதனைச் சாவடியின் சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமை இன்றுள்ள அமைதிச் சூழலை மேலும் பாதுகாத்து பலப்படுத்துவதற்குமான சாதகமானதொரு சூழலொன்றை உருவாக்கியுள்ளதுடன், இது மக்களுக்கு கிடைக்கப்பபெற்றுள்ள வரப்பிரசாதமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையினை முன்னெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புனர்வாழ்வு ஆணையாளரின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை!!
Next post வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட இருவர் கைது!!