சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம்!!

Read Time:2 Minute, 44 Second

1659806763Untitled-1தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி​ டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, 10-வது விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார்.

இதன்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இசாந்த் சர்மாவிற்கு தொடர்ந்து பவுன்சராக வீசினார்.

இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பிராசத்துடன் இணைந்து தினேஷ் சந்திமால், லகிரு திரிமானே ஆகியோரும் இசாந்த் சர்மாவுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக தம்மிக பிரசாத் துடுப்பெடுத்தாடிய வேளை, இசாந்த் சர்மா பந்தில் அடிபட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மைதான நடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று போட்டி முடிந்தபின் இந்த விவாகரம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஐ.சி.சி. நன்னடத்தை விதியை மீறியது தெரிய வந்தது.

இதனால், இசாந்த் சர்மா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. எனவே, தென்னாபிரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது முதல் போட்டியில் இசாந்த் சர்மாவால் பங்கேற்ற இயலாது.

அதுபோல், இலங்கை வீரர் சந்திமால் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தம்மிக்க பிராசத் மற்றும் லகிரு திரிமானேவுக்கு போட்டியின் வருவாயில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவரைப் பற்றி தெரிந்தால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்!!
Next post போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கு எதிர்ப்பு!!