சுற்றுலா சென்ற பௌத்த பீட பிக்கு மாணவன் நீரில் மூழ்கி பலி!!
கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து சுற்றுலா சென்ற 30 பௌத்த பீட பிக்கு மாணவர்களில் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு பிக்கு மாணவனான குருநாகலை சேர்ந்த சந்திரானந்த ஹிமி (வயது 22) என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.