கஷ்டப் பிரதேசங்களில் சுகாதார சேவையைப் பலப்படுத்த வேண்டும்!!

Read Time:1 Minute, 38 Second

296769989My3நகர்ப்புறங்களைப் போன்றே கஷ்டப் பிரதேசங்களிலும் சுகாதார சேவையை பலப்படுத்துவது தேசிய தேவைப்பாடு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் இலவச சுகாதார சேவை இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வளங்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை இடர்களில் இருந்து பொது மக்களின் உயிர்களை பாதுகாக்க, சுகாதார துறைக்கு மிகவும் உயர்ந்த பொறுப்பு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் சுகாதாரத் துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து தான் அறிந்திருப்பதனால் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!!
Next post கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!!